
சென்னையில் ‘காக்கா’ படத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கூல் சுரேஷ் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, போன வாரம் ‘கங்குவா’ படம் ரிலீஸ் ஆனது. நான் என்ன தவறு செய்தேன், என்னை எல்லாரும் திட்டுறீங்க. திருக்குறளில் இல்லாத வார்த்தை எல்லாம் இருக்கிறது. என்னை மட்டும் திட்டினால் பரவாயில்லை, எல்லா தெருவில் உள்ளவர்களையும் சேர்த்து திட்டுறீங்க. அந்த படத்தின் மீது உங்களைவிட எனக்கு தான் அதிக கோபம் வரணும். ஏனென்றால் அந்தப் படத்தின் இயக்குனரான சிறுத்தை சிவா, எனக்கு அவர் எடுத்த சிறுத்தை படத்திற்கு முன்பிருந்தே தெரியும். என்னை அவர் அந்த படத்தில் பயன்படுத்தி இருக்கலாம், ஆனால் அவர் என்னை பயன்படுத்தவில்லை. எத்தனை தடவை போன் பண்ணி பேசி இருப்பேன் தெரியுமா. ஒருவேளை கேரக்டர் இல்லாமல் இருக்கலாம்.
அந்தப் படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா சார், என்னை செல்லம், தங்கம் என்று பாசமாக இருப்பார். அவரும் என்னை பயன்படுத்தவில்லை, இருப்பினும் நான் அந்த படத்திற்கு அவ்வளவு விமர்சனம் வரும்போது நான் தான் முதன் முதலில் குரல் கொடுத்தேன். அதன் பிறகு தான், ஜோதிகா மேம் குரல் கொடுத்தார்கள். அதன் பிறகு சில தயாரிப்பாளர்கள் குரல் கொடுத்தாங்க. ஆனால் விதை நான் போட்டேன். உண்மையிலே நான் கங்குவ படத்தை பார்க்கவில்லை. ஏனென்றால் அந்த படத்தை பார்த்தால், சில கதாபாத்திறங்களை பார்க்கும் போது, இதில் என்னை பயன்படுத்தி இருக்கலாமே என்று தோணும். அதனால்தான் நான் இன்னும் அந்த படத்தை பார்க்கவில்லை. அதேபோன்று ‘ஜெய்பீம்’ படத்தையும் நான் பார்க்கவில்லை, ஆகையால் என்னை திட்டாதீர்கள் என்றார்.