
திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், என்னிடம் கூட்டம் முடித்தவுடன் கலைஞர் கேட்பார்…. துரை என் பேச்சு எப்படி இருந்தது? என கேட்பார்… சூப்பர் அண்ணனே… டபுள் சூப்பர் அண்ணே என சொல்லுவேன்… அவர் பேசும் போது ரெண்டு தடவை தம்பித் துரை முருகன் என சொல்லி வைப்பாரு… எப்படியா சூப்பர் என்று என்று கேட்டாரு…
என் பெயரை இரண்டு தடவை சொன்னேங்களே அதான் சூப்பர் என சொல்லுவேன்… அதே போல தளபதி பேசி வந்த உடனே சொன்னேன்… தம்பி சூப்பர் பா உன் பேச்சு என்று சொன்னேன். ஒரு புதுமையாக…. என்னை மட்டும் மையப்படுத்தாமல்… நீங்கள் என்னப் பணி ஆற்றுகிறீர்கள்? என்பதையும் மையப்படுத்தி இருக்கிறீர்கள்.
நான் இந்த மாவட்டத்தில் நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து மெய் மறந்து போனேன்.இது மாதிரி எந்த மாவட்டத்திலும் செய்யவில்லை. சில பேருக்கு சொன்னால் தான் செய்வாங்க. சில பேரு சொல்லாமையே செய்வாங்க…. நீ சொல்லாமலே செய்கிற அறிவாளி. அதனால் நான் என்ன உங்களுக்கு சொல்றேன்னு கேட்டா…. பத்து பத்து மாவட்ட செயலாளர்களை ஒரு நாளைக்கு கூப்பிட்டு….. உட்கார வச்சி இந்த படத்தை போட்டுக் காட்ட வேண்டும்.
நான் பொதுச் செயலாளர் கூப்பிடுறேன்… உங்களை பாராட்டணும் என கூப்பிடனும்… உடனே வருவாங்க… இந்த படத்தை போட்டு காட்டணும்…மகேஷை நான் என்னமோன்னு நினைச்சேன். எதையும் சாதிக்கிற திறமை இருக்கு. ஆனால் எதுவும் இருக்கிற மாதிரி இல்லாம நடிக்கிற திறமையும் இருக்கு என பாராட்டினார்.