
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், லோகேஷுக்கு என்ன தெரியும்? அதுதான் நடிகர் சங்கம் தப்பு பண்ணி இருக்கிறது. இப்படி காண்பித்தால் எனக்கே அது கேவலமாக இருக்கிறது…. முதலில் ஒன்னு கேட்டுட்டு… பைத்தியக்காரர் பித்த வாந்தி எடுப்பது மாதிரி எடுக்காத… கேள்வியே முழுசா சொல்லவில்லை… என்னை பதில் சொல்ல விடனும்…. பதில் சொல்ல விடனும்…. உங்களுக்கு என்ன டவுட் என்று கேளுங்கள் ? தெளிவாக கேளுங்கள்….
நடிகர் சங்கம் தப்பு பண்ணுகிறது…. ஒரு வீடியோவை போட்டால் அதை கேட்க வேண்டும். ஒரு வீடியோவை கட் பண்ணி போன்று போய் கோர்ட்டில் போட்டு…. இவன் சொல்லுறான் தண்டனை கொடுங்கள் என்றால், கொடுத்துடுவியா ? பார்க்க வேண்டாமா ? நடிகர் சங்கம் போனே பண்ணவில்லை… நான் பண்ணியதற்கு எடுக்கவில்லை… இது முறையா ? ஒரு சங்கம் என்றால், அதுதான் நான் திருப்பி திருப்பி சொல்லுகிறேன்…. புரியாத ஆளாக இருக்க…
திரிஷாவை எல்லாம் நான் ரொம்ப மதிக்கிறேன்.மீண்டும் சொல்கிறேன்… நான் இன்னும் இந்த விஷயத்துக்குள்ளே போகவில்லை…. நான் அமைதி காத்துக் கொண்டிருக்கிறேன்….. நடிகர் சங்கத்தை மட்டும் சொல்லவில்லை…. யாரெல்லாம் கட் பண்ணி…. பிரசண்ட் பண்ணி…. விவ்யூ கேட்கிறார்களோ, அதற்கு பதில் சொல்கிறார்களோ… அவர்களை தான் கூமுட்டை என சொன்னேன். நீங்கள் சொல்லுவதை விட அதிகமாக இருக்கிறார்கள்…. அதற்கான தேவை இப்பொழுது வரும்….. 4 மணி நேரத்தில் முதலில் அறிக்கையை திருப்பி வாங்கிட்டு, முறைப்படி மன்சூர் அலிகான் இது என்ன என்று கேட்க வேண்டும் ? அதுதான் என் கோரிக்கை என தெரிவித்தார்.