திருச்சி எஸ்.பி. வருண்குமார் சமீபத்தில் தன் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் அதிரடியான ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், “ரேஷன் அரிசி திருடல், நில அபகரிப்பு, பணம் கையாடல், திரள் நிதி சுரண்டல் மற்றும் இணையதள கூலிப்படையை இயக்குதல் போன்ற சட்ட விரோத செயல்களை பற்றி தகவல் தர விரும்பினால், என்னை தொடர்பு கொள்ளலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்காக, அவரது செல்போன் எண் 94874 64651 என்பதையும் பகிர்ந்து, “I am Waiting” என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு, திருச்சி மக்களிடையே பெரும் கவனம் பெற்றது. குறிப்பாக, நகரில் சட்ட விரோத நடவடிக்கைகள் நடைபெறுவதைக் குறித்தும், அதற்கெதிராக எஸ்.பி. வருண்குமார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பது தெளிவாகிறது. சமூகத்தில் இருந்து எந்தவிதமான குற்றச்செயல்கள் நடைபெறாமல் இருக்க, மக்கள் செய்திகளை நேரடியாக வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதிக வரவேற்பைப் பெற்ற இந்த பதிவு, சமீபத்தில் நாதக கட்சியினருக்கும் எஸ்.பி. வருண்குமாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலுக்கு பின்பாக வந்தது குறிப்பிடத்தக்கது.