தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட்‌ அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் இதில் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6-ம் தேதியும், குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதியும் ரிலீஸ் ஆகிறது. தற்போது நடிகர் அஜித்குமார் கார் ரேஸில் பிஸியாக இருக்கிறார். இனி வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டும் தான் நடிப்பேன் என்று அஜித் கூறிய நிலையில் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற 24H கார் பிரேசில் நடிகர் அஜித் அணி மூன்றாம் இடத்தை பிடித்தது.

இதைத்தொடர்ந்து தற்போது நடிகர் அஜித்குமார் தெற்கு ஐரோப்பிய பேர்ஷே ஸ்பிரிண்ட் தொட 2025ல் கலந்து கொண்டுள்ளார். இந்த ரேசின் போது நீங்கள் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று நடிகர் அஜித்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், எல்லோரும் சந்தோஷமாக ஆரோக்கியமாக வாழுங்கள் I love you all என்று கூறினார். மேலும் அவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அவர் தமிழில் பதில் சொன்னார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.