
டெல்லியை சேர்ந்த வாலிபர் ஒருவர் உணவு டெலிவரி நிறுவனமான சொமாட்டோவில் பணிபுரிந்து வருகிறார். இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் 20 ரூபாய் சம்பாதிக்க எண்ணலாம் செய்ய வேண்டியது இருக்கு என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் நான் 20 ரூபாய் சம்பாதிப்பதற்காக எவ்வளவு உழைக்க வேண்டியது இருக்கிறது என்பதையும் இதற்காக நான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் நீங்கள் பாருங்கள் என்று அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து அந்த வாலிபர் உணவகத்தில் ஆர்டர் எடுத்துக்கொண்டு அதை டெலிவரி செய்யும் இடத்திற்கு கொண்டு சென்று கொடுத்துள்ளார். இந்த ஒரு ஆர்டரை முடிப்பதற்கு அவருக்கு சுமார் 20 நிமிடங்கள் ஆகிறது. அதன்பின் ஆர்டரை டெலிவரி செய்த பின்பு அதை ஆப்பில் அப்டேட் செய்தார். அதற்கு அவருக்கு 20 ரூபாய் உங்களது சேலரி என அறிவிப்பு வந்தது. இதை அனைத்தும் அந்த வாலிபர் வீடியோவாக எடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் இதற்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.