சீனாவில் ஜாங் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் Sci-fi படங்களால் ஈர்க்கப்பட்டு நிஜ வாழ்க்கையில் ஒரு ரோபோ உடன் இணைந்து வாழ முடிவெடுத்துள்ளார். இதற்கான வாடகையாக ஒரு நாளைக்கு ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலுத்துகிறார்.

சமைப்பது போன்ற வீட்டு வேலைகளுடன் ஜாங் உடன் இணைந்து காபி குடிக்க செல்வது, ஷாப்பிங் உள்ளிட்டவற்றையும் இந்த ரோபோ செய்கிறது. ரோபோவே காதலியாக இருப்பதால் மனித காதலி தனக்கு வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.