அமெரிக்க நீதிமன்றத்தில், அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழக மின்வாரியத்தின் பெயரும் இருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருந்தார். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை. அவர் தினமும் அறிக்கை வெளியிடுகின்றார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

இது பாஜக மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதோடு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக தலைவர் அன்புமணி கூறினார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், முதல்வர் விமர்சனம் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, அவரைப் போல பிரகாச அரசியல் ஞானம் எனக்கு இல்லை. நான் என்ன செய்ய முடியும், எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று கூறினார்.