தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பிரபாஸ் தற்போது ‘ராஜா சாப்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகும் ‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் பிரபாஸ் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாலிவுட் பிரபல ஜோடி சயிஃப் அலிகான் மற்றும் கரீனா கபூர் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த படத்தில் கொரியன் நடிகர் மா டொங் சியோக் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் ,  தற்போது இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சந்தீப் ரெட்டி இயக்கும் படங்களில் வில்லன் கதாபாத்திரத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் இருக்கும். அந்த வகையில் ‘ANIMAL’ படத்தில் பாபி தியோலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதைப் போல, ‘ஸ்பிரிட்’ படத்தில் சயிஃப் அலிகான் மற்றும் கரீனா கபூர் ஜோடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தேவரா’ படத்தில் சயிஃப் அலிகான் வில்லன் கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.