கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள  குறிஞ்சி கங்காபுரத்தில் சிவக்குமார்- திலகவதி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சிவக்குமார் ஜே.சி.பி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் சிவகுமார் கடந்த சில மாதங்களாக டெல்லியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நண்பரான ஹரிஷ் என்பவரை தனது மனைவிக்கு உதவி செய்யும்படி சிவக்குமார் கூறியிருந்தார். இதனால் அடிக்கடி ஹரிஷ் சிவக்குமார் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அப்போது திலகவதிக்கும் ஹரிஷுக்கும் பழக்கம் ஏற்பட்டு காலப்போக்கில் தகாத உறவாக மாறி உள்ளது.

இது குறித்து அறிந்த சிவகுமார் தனது மனைவியை கண்டித்து அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு மன உளைச்சலில் இருந்த மனைவி திலகவதி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திலகவதி தற்கொலை செய்து கொண்டதை அறிந்ததும் ஹரிஷும் தற்கொலை செய்துள்ளார்.

அதன் பின்பு திலகவதியின் உடலை சிவக்குமாரின் உறவினர்கள் காவல்துறைக்கு தெரியாமல் அடக்கம் செய்ய முயற்சி செய்தனர். ஆனால் இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் திலகவதியின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.