
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 30, 2025
அதாவது அந்த வீடியோவில் 2 குரங்கு குட்டிகள் குப்பைத் தொட்டியின் மேல் அமர்ந்திருக்கிறது. அதில் ஒரு குரங்கு மட்டும் தனது கையில் ஒரு பொருளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறது. அப்போது அங்கு வந்த வாலிபர் தனது கையில் இருந்த வாழைப்பழத்தை குரங்குக்கு உணவளிக்கிறார். இதனை குரங்கு சிறிது நேரம் பார்க்கவில்லை.
அதன் பின் வாழைப்பழத்தை பார்த்த குரங்கு வாங்கி உண்ணும் என்று நினைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. அந்த குரங்கு அந்த வாழைப்பழத்தை வாங்கி குப்பை தொட்டியில் வீசியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.