ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின் போது டெல்லி ராஜ் பாதையில் கோலாகலமாக அணிவகுப்புகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் நடைபெற உள்ள 71 -வது குடியரசு தினத்திற்காக தலைநகர் டெல்லி முழு வீச்சில் தயாராகி வருகிறது.

1. குடியரசு தினம் என்றால் என்ன?

  • இந்திய அரசியலமைப்பு சட்டம் செயல் ஆக்கத்திற்கு வந்த நாளை குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
  • 1950 -ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளால் எழுதப்பட்ட அரசியல் அமைப்பு கையெழுத்திடப்பட்டது.

2. குடியரசு தினம் எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது.?

  • 1950 ஆம் ஆண்டு முதல் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.
  • அதாவது விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பாக மகாத்மா காந்தி ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26 -ஆம் தேதி மக்களாட்சி மலர்ந்த நாளாக கொண்டாட சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது.

3. குடியரசு தினம் கொண்டாடும் முறை.?

  • டெல்லியில் குடியரசு தலைவர் மூவர்ண கொடியை ஏற்றி இந்திய படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார்.
  • அதன் பின் சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு பதக்கங்களையும் அவர் வழங்குவார்.
  • இதனையடுத்து மாநிலங்களில் அந்தந்த மாநில ஆளுநர் கொடியேற்றி காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார். பின் வீர, தீர செயல் புரிந்த அனைத்து காவலர்களுக்கும் பதக்கங்களை வழங்குவார்.

4. குடியரசு தினத்திற்கும் சுதந்திர தினத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன.?

  • சுதந்திர தினம் என்று சொல்லும் போது யாரிடமிருந்து விடுதலை பெற்றிருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது.
  • அதாவது 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஆங்கிலேயர் நள்ளிரவில் நமக்கு வழங்கியது தான் சுதந்திரம். நமக்கு அப்போது கிடைத்த சுதந்திரம் முழுமையானது அல்ல.
  • ஏனென்றால் சுதந்திரம் பெற்றபோது பிரிட்டிஷ் அரசு இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து தான் வழங்கியது. அதன்படி பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்து வந்தார்.
  • அதன் பின் 1949 நவம்பர் 26 இல் இந்திய அரசியலமைப்பு இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950 ஜனவரி 26 இல் நடைமுறைக்கு வந்தது அதுதான் குடியரசு தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.