
இந்தியாவின் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ரயிலில் பயணிகள் செல்லும்போது சில முக்கியமான விதிமுறைகள் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது உங்கள் ரயில் பகலில் புறப்படுவதாக இருந்தால் ரயில் கிளம்புவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக ரயில் நிலையத்தை கண்டறிய வேண்டும். இதேபோன்று நீங்கள் டிக்கெட் எடுத்த பிறகு ரயில் இரவு நேரத்தில் கிளம்புவதாக இருந்தால் 6 மணி நேரத்திற்கு முன்பாக ரயில்வே நிலையத்திற்கு வரலாம்.
இதேபோன்று ரயிலில் இருந்து இறங்கிய பிறகு பகலில் 2 மணி நேரமும் இரவில் 6 மணி நேரமும் ரயில்வே நிலையத்தில் தங்கலாம். அப்போது உங்கள் கையில் டிக்கெட் கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த நேரத்தை தாண்டி நீங்கள் ரயில்வே நிலையத்தில் இருப்பதாக இருந்தால் கண்டிப்பாக பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்க வேண்டும். இந்த பிளாட்பார்ம் டிக்கெட் 2 மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடி ஆகும். மேலும் இந்த குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு மேல் நீங்கள் ரயில்வே நிலையத்தில் இருந்தால் உங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்.