வருமானவரித்துறையினரால் வழங்கப்படுவது பான் கார்டு ஆகும். இது வங்கி கணக்கு திறக்கவும், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வாங்க, சொத்துக்கள், கடன்கள் பெற, இன்சூரன்ஸ் பயன்பாட்டிற்கு, அந்திய செலவாணி பண பரிவர்த்தனை, அடையாளச் சான்று பெற போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு பான் கார்டு அவசியமாகும்.இந்த பான் கார்டுகள் மூலம் வரி ஏயிப்பு போன்றவை தடுக்கப்படுகிறது.

பத்து இலக்க எண் கொண்ட பான் கார்டு நிதி தொடர்பான அனைத்து பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. வருமானவரி துறையின் அறிவிப்பின்படி, ஒருவருக்கு ஒரு பான் கார்டு தான் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படுகிறது.மேலும் இரண்டு பான் கார்டுகள் வைத்திருந்தால் அது சட்டப்படி குற்றமாகும். எனவே ஒருவர் இரு பான் கார்டுகளை வைத்திருந்தால் அதனை முறையாக அதில் ஒரு கார்டை ரத்து செய்வது நல்லது இல்லையெனில் கண்டிப்பாக சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும்.