
திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இப்போது ADMK, பாஜகவுடன் கூட்டணி இல்லை…. கூட்டணி முறிச்சி போச்சு… மாநிலத்தினுடைய உரிமைகளை எல்லாம் மீட்க போகிறோம் என்று சொன்னார்கள்…. சட்டமன்றத்தில் கவர்னர் அனுப்பி வைத்த தீர்மானத்தை எல்லாம் மீண்டும்கவர்னருக்கு அனுப்பியாச்சு. அதிலும் ஓட்டு போடாமல் வெளிநடப்பு செய்தது.
இரண்டே இரண்டு இயக்கத்தினர் தான்…. ஒன்று பாஜக… இன்னொன்று அதிமுக என்பதை நீங்கள் உணர வேண்டும். இதிலையே அவர்களின் கூட்டு களவாணி தனம் தெரிகின்றது. இங்கு ஆளுநருக்கு ஏதாவது ஒன்று என்றால் அமித்ஷா கோச்சிப்பாரு. ரெய்டு வந்து விடுவார்கள். இன்றைக்கு நம்முடைய அமைச்சர்கள் மீது எல்லாம் ஈடி, ஐடி, ரைட் இப்படின்னு தொடர்ந்து ரெய்டு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் உங்களிடம் ஒன்றே ஒன்று சொல்லுகிறேன்…
பாஜக, திரு. நரேந்திர மோடி அவர்களே…. நீங்கள் இப்போ எவ்வளவு ரெய்டு வேண்டுமானாலும் விடுங்கள்…. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவும் பிஜேபிக்கு ரெய்டு விடப்போகிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் அடிமைகளை விரட்டி அடித்தோம்… 2024இல் நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளினுடைய எஜமானர்கள், ஓனர்ஸ்களையும் வீட்டுக்கு அனுப்புவோம் என தெரிவித்தார்.