
தமிழகம் முழுவதும் வருகிற 17-ஆம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. முன்னதாக செப்டம்பர் 16 மிலாடி நபி பண்டிகை என்று இருந்த நிலையில் பின்னர் செப்டம்பர் 16ஆம் தேதி என்று மாற்றப்பட்டது. இதன் காரணமாக அரசாங்கம் செப்டம்பர் 17ஆம் தேதியை பொது விடுமுறை தினமாக மாற்றி அறிவித்தது.
இந்நிலையில் முக்கிய தலைவர்களின் பிறந்த தினம் மற்றும் பண்டிகை தினங்களில் மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழகம் முழுவதும் வருகிற 15ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.