
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் வசித்து வருபவர் தீரஜ் குயின்ம். இவருக்கு தனுஸ்ரீ மஜ்ம்தார் என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. தீரஜ் க்கு பணியிடத்தில் கோலாக்காட் பகுதியில் கோட்ரஸ் வீடு வழங்கியுள்ளனர். அங்கு தனது மனைவியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் தனுஸ்ரீ தனது தோழியான மௌசுனி பால் என்ற பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் தங்களது வீட்டில் நீண்ட நாட்களாக தங்க வைத்துள்ளார். தனது மனைவியின் தோழி குடும்பத்தினர் தங்குவது கணவர் தீரஜ் க்கு பிடிக்கவில்லை. இருந்த போதும் சில காலமாக அவர்களுடன் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருந்தார்.
இதனால் மனைவி தனுஸ்ரீ தன்னுடன் தாம்பத்தியத்திலும், தனக்காக நேரம் செலவிடுவதிலும் கவனம் செலுத்தவில்லை என கூறி நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டுள்ளார். இதனை அடுத்து மனைவி தனுஸ்ரீயும் கணவர் தன்னை வரதட்சணை கட்டு கொடுமைப்படுத்துவதாக பதிலுக்கு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனால் கணவரின் புகார் நிராகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கணவர் தீரஜ் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் சப்ய சாசி பட்டாச்சாரியார், உதயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்றது.
இந்த வழக்கில் விசாரணையின் போது கணவர் தீரஜ் தனக்கு நடந்த கொடுமைகளையும் தனது மனைவி தோழி மற்றும் அவரது குடும்பத்துடன் இணைந்து தனக்கு செய்த இடையூறுகளையும் கூறியுள்ளார். இதனால் கணவரின் சம்மதம் இல்லாமல் மூன்றாவது நபரை வீட்டில் தங்க வைத்து மனரீதியாக கொடுமை செய்வது மற்றும் குழந்தைகள் பெற்றுக் கொள்வது, தாம்பத்தியத்தில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது போன்ற மன ரீதியான கொடுமைகளை செய்ததால் கணவருக்கு விவாகரத்து அளித்து உத்தரவிட்டனர். கணவர் விவாகரத்து மனுவை அளித்த பின்னே மனைவி வரதட்சணை கொடுமை புகார் கொடுத்ததால் இது நம்பத் தகுந்தது அல்ல எனக் கூறி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது.