
ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. ஐபிஎல் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 3 வருடங்களுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பி உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ் தோனி இருக்கிறார். இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில், ஜடேஜா சிஎஸ்கே அணியில் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இங்கிலாந்து வீரர்களான மொயின் அலி மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ள நிலையில் இவர்கள் சென்னைக்கு வந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் புதிதாக களமிறங்குவதால் சென்னை அணி வீரர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு அவர் வரும் காட்சியை வீடியோவாக இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் பென் ஸ்டோக்ஸ் நடந்து வரும்போது சென்னை 60028 படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒலிக்கிறது. மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram