இந்திய ரயில்வே துறை பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. தண்டவாளங்கள் மற்றும் ரயில் அறிவிப்புகளை கவனமாக பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இருப்பினும் சிலர் ரயில்வே விதிகளை மீறி செயல் செயல்படுவது தற்போது அதிகரித்துள்ளது.

இதே போன்று இணையதள பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதில் ஓர் இடத்தில் ரயில் செல்வதற்காக ரயில்வே கேட் மூடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மக்களும் காத்திருக்கின்றனர். ஆனால் ஒரு நபர் காத்திருப்பதற்கு பதிலாக தனது பைக்கை தோளின் மேல் தூக்கி வைத்துக் கொண்டு ரயில் தண்டவாளங்களை கடக்கிறார். இதனை அங்கு உள்ளவர்கள் ஆச்சரியத்தில் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.