
திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யா மொழி, ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முக்கிய காரணங்கள்.. மாநகர கழகத்தினுடைய செயலாளர்கள்…. ஒன்றிய கழகத்தினுடைய செயலாளர்கள்…. பகுதி – நகர – பேரூர் – வட்டம் ஏன் அந்தந்த கிளைப் பகுதியைச் சார்ந்த செயலாளர்கள் நினைத்ததால் தான் எங்களால் இவ்வளவும் சாத்தியப்பட்டிருக்கிறது என்பதை நான் மறக்க மாட்டேன்.
ஆகவே அண்ணன் துரைமுருகன் இன்றைக்கு நமக்கான அறிவுரை வழங்க வந்து இருக்கின்றார். அண்ணன் துரைமுருகன்னை பற்றி சொல்ல வேண்டும் என்றால், எதோ புதுசா நான் சொல்லி தெரிஞ்சுக்கணும்ன்னு அவசியம் இல்லை… இருந்தாலும் எனக்கான பல்வேறு நிகழ்வுகள்…. இன்னும் என்னால மறக்க முடியாது. பல நேரங்களில் எனக்கு அறிவுரைக் கொடுத்து இருக்கிறார். ஒரு மாவட்ட செயலாளராக நான் பணியாற்ற வேண்டும் என்று சொன்னால்,
இவர்களைப் போன்றவர்கள்…. உங்கள் தாத்தா என்ன சொன்னார்? உங்க தாத்தா எப்படிப்பட்ட ஆள் தெரியுமா ? உங்க தாத்தா எப்படி கட்சி வளர்த்தார்னு தெரியுமா? உங்க தாத்தாக்கு அன்னைக்கு இருந்த பிரச்சனை என்னன்னு தெரியுமா ? என இவர்கள் எல்லாம் சொல்ல, சொல்ல நாமும் பணியாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தை வழங்குபவர் அண்ணன் துரைமுருகனை போன்றவர்கள் தான் என பெருமை பட பேசினார்.