ஜப்பானில் டோக்கியோவில் வசித்து வருபவர் ரியோடா மியாஹாரா(39). இவர் ஓர் அலுவலக ஊழியர் ஆவார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி  காவல் துறையால் அத்துமீறி நுழைதல் மற்றும் திருட்டு முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இதன் பின் நடந்த விசாரணையில் ரியோடா ஒரு ஹோட்டல் பணியாளராக பணிபுரிந்து வரும் பெண்ணின் வீட்டிற்குள் அவரது அனுமதி இன்றி போலியான சாவியை தயாரித்து அடிக்கடி நுழைந்துள்ளார். மேலும் அவரது வீட்டிற்குள் அவரது அனுமதி இன்றி நுழைந்து டிவி பார்ப்பது, படுக்கையறை மற்றும் குளியல் அறைகளை ஆராய்ந்து பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் 10 முறைக்கு மேல் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து உள்ளார்.

இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் அந்தப் பெண்ணின் வீடு மிகவும் சுத்தமாகவும், அழகாகவும் உள்ளதால் சென்றதாக கூறியுள்ளார். இது மட்டும் இன்றி அதே ஹோட்டலில் பணிபுரியும் பலரின் வீட்டிற்குள்ளும் அத்துமீறி நுழைவதை வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரியவந்தது.