சென்னை வெள்ள பாதிப்பில் மக்களுக்கு உதவும் பணியில் தனி நபர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஈடுபடலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்து இருக்கிறது.

சென்னையில் பல்வேறு தாழ்வான பகுதி, குடியிருப்புகளில் தண்ணீர் ஆனது வடியாமல் இருக்கின்றது. இதனால் பொதுமக்கள் இரண்டு நாட்களாக அத்தியாவசிய தேவைகளுக்காகவே கஷ்டப்படுகின்ற ஒரு சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் நிவாரண பணிகளை வேகமாக மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசின் சார்பில்  அதிகாரிகள்,   அமைச்சர்களை முடுக்கி விட்டுள்ளார்.

கிட்டத்தட்ட சென்னையில் மட்டும் ஐந்து அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு,  தொடர்ச்சியாக பணியாற்றி வரும் நிலையில்,  ஒரு பக்கம் தலைமை செயலாளர் தலைமையில் அலுவலக குழுவும் அமைக்கப்பட்டு  அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.   இப்படியான  செயலை தமிழக அரசு செய்து கொண்டிருக்கும் நிலையில்,  கூடுதலாக தன்னார்வ தொண்டர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

குறிப்பாக பல்வேறு இடங்களில் இன்னும் மக்களுக்கு செய்ய வேண்டிய உதவி நிறைய இருக்கிறது. பல இடங்களில் தண்ணீர் ஆனது இடுப்பளவு இருந்து கொண்டு, மக்கள் வெளியே வர முடியாத சூழல் இருந்து கொண்டிருக்கிறது.  பொதுமக்கள் யாரும் தற்போது வீட்டை விட்டு கடைக்கு வருவது சிரமத்துக்கு உட்பட்ட காரியமாக இருக்கிறது.  கிட்டத்தட்ட மூன்று நாட்களாக  மின்சாரம் இல்லாமல்,  அதேபோல அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காமல் தள்ளாடி கொண்டு இருக்கின்றார்கள்.

கனமழை பாதிப்பு என்பது எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாக மிகப்பெரிய பாதிப்பு  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு  மாவட்டங்களும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய பொதுமக்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளார்.  சென்னை  நகரில் மட்டுமல்லாது, சென்னை புறநகரிலும் பாதிப்பு ஆனது பெரிய அளவில் இருக்கிறது. இதற்காகத்தான் தற்போது  தன்னார்வ தொண்டு நிறுவனங்களும்,  தன்னார்வலருக்கும் தமிழக முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர்கள் நேரடியாக அரசுடன் இணைந்து நிவாரண பணியில் ஈடுபட வேண்டும். அரசுடன் இணைந்து பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைக்கு முன் வரலாம். அப்படி செய்தால் தான் மிக விரைவில் பொதுமக்களை  பாதிப்பிலிருந்து  முழுமையாக வெளியே கொண்டுவர  முடியும் என்று தற்போது தமிழ்நாடு அரசு அவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போல கீழ்காணும் அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு,  தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் அரசோடு கைகோர்க்க முன் வரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

97 91 14 97 89

94 45 46 17 12

98 95 44 06 69

73 97 76 66 51