தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் மாநிலங்களுக்கான கல்வி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். அதுவரை கல்வி நிதி தர முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மும்மொழி கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்றுக்கொண்டது. ஆனால் தமிழ்நாடு மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறது என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபிரபு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய அரசியல் அமைப்பு கூட்டத்திற்கு எதிராக ஆத்திரத்திலும், அகங்காரத்திலும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியிருக்கிறார். ஒன்றிய அரசு குழந்தைகளை வஞ்சிக்கிறது.