நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பெரியாரை குறித்து அவதூறாக பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அம்பேத்கரையும், பெரியாரையும் ஒப்பிடுவது ஓர் முரண், இருவரின் சிந்தனையும் ஒன்றல்ல, அம்பேத்கர் உலகின் தலைசிறந்த கல்வியாளர், ஆனால் பெரியார் தனக்கு தோன்றுவதை எல்லாம் பேசுவார். தன்னுடைய பெருஞ்செல்வத்தை நாட்டின் விடுதலைக்காக வ உ சி விற்றார், அவரது கடைசி காலத்தில் வறுமையில் தள்ளப்பட்டார். இவர் போராளியா? பெரியார் போராளியா? சமூக நீதிக்கும் பெரியாருக்கும் சம்பந்தம் உள்ளதா அல்லது இட ஒதுக்கீட்டிற்கும், ஆனைமுத்துக்கும் சம்பந்தம் உள்ளதா? போராடி பெற்றுக் கொடுத்தது ஆனைமுத்துவா? இல்லைனா பெரியாரா? என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதற்கு திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார். திமுக சட்டத்துறை 3-வது மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர் எனக்கு இருக்கும் ஒரே தலைவர் அம்பேத்கார் என்று பெரியார் கூறினார். தமிழ்நாட்டு மக்கள் என்னிடம் வரம் வேண்டாம் எனக்கும் சேர்த்து பெரியார் அங்கே இருக்கிறார் என்று அம்பேத்கர் கூறினார். வ உ சிக்கும் பெரியாருக்கும் பிரச்சனை இல்லை, பெரியார் படத்தை பார்த்தால் வ உ சி கும்பிடுவார். ஆனைமுத்துக்கும் பெரியாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை, பெரியார் உடன் தான் அவர் வாழ்ந்தார். எதையெல்லாம் திரிக்க வேண்டுமோ அவ்வளவும் திரித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்.