அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிராக திமுக அரசை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினார். இந்தப் போராட்டத்தை குறித்து பலரும் தங்களது கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துக் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டது வெறும் விளம்பரத்திற்காக மட்டும்தான்.

தேங்காய் நார் அல்லது தோலினால் ஆன சாட்டையால் அடித்து கொள்ளவில்லை மாறாக பஞ்சினால் ஆன சாட்டையால் அடித்துக் கொண்டுள்ளார். இது வெறும் விளம்பரத்திற்காக செய்யப்பட்ட ஒன்றுதான். இனி அண்ணாமலை எந்த காலமும் காலில் செருப்பு அணிய போவதில்லை. ஏனெனில் இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் நடைபெறும் என சேகர் பாபு கூறினார்.