
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பெருங்காலிபுரம் கிராமத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன் தினம் தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ஆடு மேய்ப்பதற்காக சென்றார். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் மூதாட்டியிடம் சென்று பேச்சு கொடுத்துள்ளார். திடீரென அந்த நபர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது மூதாட்டி சத்தம் போட்டுள்ளார்.
ஆனால் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் அந்த நபர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் அவரது கழுத்தில் கிடந்த 2 சவரன் தங்கச் சங்கலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இந்த தகவல் காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் பாதிக்கப்பட்ட மூதாட்டி யை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளியை தீவிரமாக தேடி வந்த நிலையில் அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவர் காவல்கிணறு பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. பின்னர் அவரிடமிருந்த தங்கச் சங்கலியை பறிமுதல் செய்த காவல் துறையினர் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே குற்றவாளியை கைது செய்த காவல்துறையினரை மாவட்ட எஸ்பி பாராட்டியுள்ளார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடந்துவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.