கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் சினேகா தேவ், ஸ்ரீ லதா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஸ்ரீதேவ் என்ற ஒரே மகன் இருந்துள்ளார். இவர் கல்லூரியில் படித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். உங்களது மகனின் மரணத்தை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் மகன் இறந்ததில் பெற்றோர் இருவரும் கவலையுடன் இருந்துள்ளனர். அதோடு மகன் இல்லாத உலகில் தங்களுக்கு வாழ பிடிக்காத நிலையில், அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கணவன், மனைவி இருவரும் திருவனந்தபுரம் நெய்யாற்றுக்கு சென்றனர்.

பின் அங்கு தங்களது கைகளை ஒன்றாக சேர்த்து கயிற்றால் கட்டிக்கொண்டு ஆற்றல் குதித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்கள் இருவரின் உடலை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் இறந்த இடத்தில் அவர்கள் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில் தங்களது மகனின் பிரிவை எங்களால் தாங்க முடியாமல் நாங்கள் தற்கொலை முடிவை எடுத்து இருப்பதாக எழுதி இருந்தனர். மேலும் சினேகா தேவியின் உடலில் அவர்களது மகனின் வெல்ட்டும் கிடந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.