
அரசு பேருந்துகளில் பயணிக்க 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளும் நடைமுறை அமலில் உள்ளது. இந்நிலையில் அரசு எஸ்.சி.டி.சி பேருந்துகளில் படுக்கை வசதியுடன் குளிர்சாதன வசதியும் இருப்பதால் பொதுமக்கள் அதிக அளவில் பயணிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை ஒட்டி பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல, கடந்த 1, 2-ம் தேதிகளில் முன்பதிவு செய்தனர்.
அக்டோபர் 28, 29-ம் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு தொடங்கியது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளிலும் சீட்டுகள் நிரம்பி விட்டன. அதேபோன்று பண்டிகை முடிந்ததும் நவம்பர் 3-ம் தேதி தனது சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு வருவதற்கும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. மொத்தம் 1500 பேருந்துகளுக்கு முதல் கட்டமாக முன்பதிவு நடந்து வருகிறது. இது தவிர சிறப்பு பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கும்.