தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் பயன்பெறவும், நலத்திட்டங்களை பெறவும் ரேஷன் அட்டை மிகவும் முக்கியமாக உள்ளது. இதன் மூலமாக தான் மகளிர் உரிமை திட்டம் போன்ற நலத்திட்டங்களை மக்கள் பெற முடிகிறது. எனவே ரேஷன் கார்டு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த ரேஷன் கார்டை நீங்கள் வீட்டிலிருந்தபடியே விண்ணப்பிக்க முடியும். அதே போன்று திருத்தங்கள் செய்யவும் முடியும்.

அதற்காக முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு வாடிக்கையாளர்கள் சென்று அங்கு ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியை தேர்வு செய்து கொள்ளலாம். இதையடுத்து வலது புறத்தில் மின்னணு அட்டை சேவைகளுக்கான பிரிவு கொடுக்கப்பட்டிருக்கும் அதில் மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இதையடுத்து உங்கள் குறிப்பு எண்ணை பதிவு செய்து உள்ளீடு செய்ய வேண்டும்.

குறிப்பு எண்ணெய் பதிவு செய்த பிறகு உங்கள் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை உங்களால் அறிய முடியும். விண்ணப்ப நிலையை பார்ப்பது மட்டுமல்லாமல், இதனை பயன்படுத்தி நகல் மின்னணு குடும்ப அட்டையை விண்ணப்பிப்பது, புதிய உறுப்பினரை சேர்ப்பது, முகவரி மாற்றம் செய்வது, குடும்ப தலைவரை மாற்றுவது, குடும்ப உறுப்பினரை நீக்குவது உள்ளிட்ட சேவைகளை உங்கள் வீட்டில் இருந்தபடியே செய்ய முடியும்.