
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் ஹரிஷ் கல்யாண், தனது சமீபத்திய பேட்டியில் வெளியிட்டிருக்கும் மத நல்லிணக்கத்தைப் பற்றிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. “நான் ரம்ஜான் கடைசி நாளில் நோன்பு பிடிப்பேன். மசூதி செல்வேன். தர்கா செல்வேன். சர்ச்சுக்கும் செல்வேன். இப்போது சபரிமலைக்கு மாலை போட்டுள்ளேன். எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது. அதை பிறரிடம் திணிக்கதான் கூடாது” என்று தனது உணர்வுகளை பகிர்ந்துள்ளார்.
ஹரிஷ் கல்யாணின் இந்த பேச்சு, மத நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. அவர் வெவ்வேறு மதங்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று, அவற்றை மதித்து வருவது, அவரது மத சகிப்புத்தன்மையை வெளிப்படுத்துகிறது. மேலும், “எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது. அதை பிறரிடம் திணிக்கதான் கூடாது” என்ற அவரது கூற்று, ஒவ்வொருவரும் தங்கள் நம்பிக்கைகளை சுதந்திரமாகப் பின்பற்ற வேண்டும் என்றும், மற்றவர்களின் நம்பிக்கைகளை மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துவதாக அவரது ரசிகர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.