
நாடு முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ஹைதராபாத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது சைதாபாத்தில் உள்ள கோவிலுக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்து, அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த கணக்காளரின் தலையில் ஆசிடை ஊற்றி ஹோலி ஹோலி என்று கூச்சலிட்டு சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இதில் பலத்தகாயமடைந்த கணக்காளரை அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையின தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.