இந்திய திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான வினோத் சாப்ரா (55) கடந்த ஜூன் 5ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இயக்குனர் வினோத் சாப்ரா ஜனவரி 1, 1970 அன்று பிறந்தார். இவர் தமிழ், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் 20 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

அவரது தனிப்பட்ட திரைப்பட விளம்பரதாரர் சஞ்சய் பூஷன் பாட்டியாலா கூறுகையில், அவரது படங்களில் சவாரி காது ஷியாம் கி அமர் கதா, மை ஹஸ்பண்ட்ஸ் வைஃப், மை ஸ்டோரிஸ் ஷாக் ஆகியவை முக்கியமானது. அவரது மை ஹஸ்பண்ட்ஸ் வைஃப் ஒரு காதல் கதை திரையுலகில் அதிகம் பேசப்பட்டது என கூறினார்.

இவரது இறப்பிற்கு திரையுலகில் உள்ள ரசிகர்கள் சக ஊழியர்கள் பிரபலங்கள் என அனைவரும் தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளனர். மேலும் அவரது இறுதிச் சடங்கு ஜூன் 6 அன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.