சென்னை மாநகராட்சியில் உள்ள ராயபுரத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகில் பழைய ஜெயில் ரோடு உள்ளது. இந்த பகுதியில் 3 மாடிகள் கொண்ட பசுமை தோட்டத்தை அமைப்பதற்கு சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைத்து மக்களை அமைதியான சூழலில் வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பசுமை மாடி தோட்டம் அமையப்பட இருக்கிறது. இந்த தோட்டம் சுமார் 6865 சதுர மீட்டரில் அமைய இருக்கும் நிலையில், நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடங்கள், குழந்தைகள் விளையாட்டு இடங்கள், எல்இடி விளக்கு வசதிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவைகளுடன் பல வண்ணமயமான செடிகள் மற்றும் புல் தரைகள் போன்றவற்றுடன் அமைய இருக்கிறது.

இதற்காக சென்னை மாநகராட்சி சுமார் 2.13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் பணிகள் முழுவதுமாக முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. மேலும் இதே போன்று மின்ட் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் மற்றொரு பசுமை பரப்பை உருவாக்கிய அதை யோகா பயிற்சி செய்யும் இடம், கழிவறைகள் மற்றும் தோட்டங்கள் போன்றவைகளுடன் கூடிய பசுமை தோட்டத்தை அமைப்பதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.