இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதாவது அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் தனக்கு பின்னால் இருக்கும் பெண்ணிடம் தனது முதுகில் துப்பாக்கியை வைக்க கூறுகிறார். அதே போன்று அந்த பெண்ணும் செய்கிறார். இதையடுத்து வேகமாக திரும்பிய வாலிபர் அந்த துப்பாக்கியை தனது கையில் எடுத்து அந்த பெண்ணை சுட முயற்சிக்கிறார். ஆபத்து காலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்று அந்த வாலிபர் பெண்ணுக்கு சொல்லிக் கொடுக்கிறார்.

இதனை பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருந்து பாட்டியிடம், வாலிபர் அதை மீண்டும் செய்ய சொல்கிறார். அதே போன்று பாட்டியும், வாலிபரின் பின்னால் துப்பாக்கியை வைப்பதற்கு பதிலாக தனது கைகளை வைக்கிறார். இதையடுத்து வேகமாக திரும்பிய வாலிபர் பாட்டியின் கையைப் பிடிக்க அந்தப் பாட்டி அந்த வாலிபரின் நெத்தியில் துப்பாக்கியை வைக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.