
நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர். இதன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துள்ளன. எனவே UPI அல்லது நெட் பேங்கிங் சேவைகளைப் பயன்படுத்தும் போது உங்கள் பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
UPI பரிவர்த்தனைகளில் ஏற்படும் தவறுகளால் சில நேரம் பணம் வேறு கணக்குக்கு சென்று விடும். அப்படி ஃபோன் பே, கூகுள் பே மற்றும் பிற UPI பேமெண்ட்டுகளின் போது, வேறு ஒருவருக்கு மாற்றி அனுப்பினால் கவலை வேண்டாம். உடனடியாக 18001201740 என்ற எண்ணுக்கு அழைத்து புகார் செய்யுங்கள். பின் வங்கிக்கு சென்று புகார் செய்யுங்கள். அவர்கள் கொடுக்கும் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். வங்கி அலட்சியமாக இருந்தால், bankingombudsman.rbi.org.in என்ற இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம்