செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி,  தமிழக ஆளுநர்,  கேரளா ஆளுநர், மேற்கு வங்கத்தில் இருக்கிற ஆளுநர் இவர்களெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை,  அதனுடைய செயல்பாடுகளை செய்ய விடாமல் தடுக்கின்ற ஒரு முயற்சியில்…. ஒரு சதித்திட்டத்தில் இந்த ஆளுநர் இறங்கி இருக்கிறார். இது திட்டமிட்ட சதி, கலந்து பேசி செய்திருக்கிற ஒரு சதி.

மாநில அரசினுடைய திட்டங்களை முறியடிக்கிற ஒரு சதி. மாநில அரசாங்கத்தின் உடைய நன்மைகள் மக்களிடம் சென்று சேராமல் செய்கின்ற ஒரு சதி. இதனை ஆளுநர் ரவி அவர்கள் செய்திருக்கிறார். உச்ச நீதிமன்றம் தெளிவாக சொல்லி இருக்கிறது. ஆளுநர் ராஜினாமா செய்வாரா ? அல்லது தொடர்ந்து நீடிப்பாரா ? என்பது எனக்கு தெரியவில்லை.

ஏன்னா அரியலூரில் ரயில் கவிழ்ந்ததற்கு….. கவிழ்ந்தது என்றால் சக்கரம் தான் கீழே விழுந்தது. ரயிலே கவர்ந்து விடவில்லை. அதற்காகவே லால் பகதூர் சாஸ்திரியும்,  ஓவி.அழகேசனும் தங்களுடைய பொறுப்புகளை ராஜினாமா செய்தார்கள். இன்றைக்கு உச்ச நீதிமன்றமே ஒரு ஆளுநருக்கு இவ்வளவு கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறது. அரச குற்றம் செய்திருக்கிறார்.

எனவே அவர் ராஜினாமா செய்வாரா ? அல்லது அதையும் துடைத்துக் கொண்டு,  இங்கேயே இருப்பாரா ? என்பது எனக்கு தெரியவில்லை. அது அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.  நிச்சயமாக அவரை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும். அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அதுதான் அவருடைய பதவிக்கு அழகு. அவருக்கு அழகே,  இல்லையோ ? அவருடைய பதவிக்கு அது தான் அழகு என தெரிவித்தார்.