
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து அரசு பேருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் புன்னார்குளம் சந்திப்பு அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியை அரசு பேருந்து ஓட்டுனர் வலது பக்கமாக முந்தி செல்ல முயன்றார்.
அப்போது ஒரு மற்றொரு வாகனம் வந்ததால் பேருந்து ஓட்டுனர் திடீரென பேருந்தை இடது பக்கமாக திருப்பியுள்ளார். அப்போது லாரியின் பின்புறம் மோதி அரசு பேருந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.