
இன்றைய நவீன காலத்தில் பெரும்பாலானோர் வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா காலகட்டத்திலிருந்து பழக்கப்படுத்தப்பட்ட இந்த செயலானது தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வீட்டில் இருந்தே பணி செய்யக்கூடிய ஊழியர்கள் பலர் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களிடையே வேலை குறித்து விவாதிக்கும் போது, anydesk, teamviewer உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்துவது வழக்கம்.
இத்தகைய செயலிகளை பயன்படுத்துவோருக்கு google நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, கூகுள் பே செயலியை பயன்படுத்தும் போது ஸ்கிரீன் ஷேரிங் செயலிகளை பயன்படுத்த வேண்டாம். ஜி.பே செயலியில் பணப்பரிவர்த்தனை செய்யும் போது ஸ்கிரீன் ஷேரிங் செயலிகளை பயன்படுத்துவதால்,
அவற்றின் மூலம் வங்கி தகவல்கள் திருடுபோவதற்கு ஏராளமான வாய்ப்புள்ளதாக google நிறுவனம் எச்சரித்துள்ளது. எனவே ஜிபே உள்ளிட்ட UPI பரிவர்த்தனை செயலிகள் மூலம் பணம் அனுப்பும் முன் Anydesk , teamviewer போன்ற ஸ்கிரீன் ஷரிங் செயலிகள் பயன்பாட்டில் இல்லாததை உறுதி செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது.