உத்திரபிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் 1 முதல் 3-ம் வகுப்பு மாணவிகளுக்கு குட் டச், பேட் டச் குறித்து ஆசிரியர் ஒருவர் சந்தித்து உரையாடினார். அப்போது அந்த மாணவிகளிடம், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் தவறான முறையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவிகள் மற்றொரு ஆசிரியருடன் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்த ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இருப்பினும் காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.