யூடியூப் என்பது சமூக ஊடகத் தளமாகும். இதில் ஒவ்வொரு நாளும் பயனர்கள் ஒரு பில்லியன் மணி நேர காணொளிகளை காண்கிறார்கள். இந்த யூடியூப் சமூக ஊடகத்தில் அவ்வபோது அப்டேட்கள் செய்வது உண்டு. அந்த வகையில் தற்போது பிரீமியம் பயனர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பயனர்களுக்கும் பயன்பெறும் வகையில் 3 புதிய அம்சங்களை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது.

முதலாவது யூடியூப்களின் வேகத்தை 0.05 புள்ளிகள் குறைக்கும் அம்சம். இரண்டாவது குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தானாகவே ஆப்பிலிருந்து வெளியேறி ஸ்கிரீன் ஆஃப் ஆகும் ஸ்லீப்பர் டைம் வசதி. IOS தளங்களில் வீடியோவை ஃபுல் ஸ்கிரீனில் பார்க்கும்போது பிரவுசிங் செய்யும் வசதியும் அமலுக்கு வந்துள்ளது.