தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-2026 க்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு திட்டங்களும், அறிவிப்புகளும் இடம் பெற்றிருந்தது. இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. அதாவது  நீலகிரி, சென்னை உட்பட 8 மாவட்டங்களில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டு கூடுதலாக 15,000 இடங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

QS தரவரிசையில் முதல் 150 இடங்களுக்குள் அண்ணா பல்கலைக்கழகத்தை இடம் பெற செய்ய “செயல் திட்டம்” மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி வளர்ந்து வரும் துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் உருவாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அதற்காக பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளார். கடைசியாக புதுமைப்பெண் திட்டத்திற்கு 420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.