
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அறநிலைத்துறை மேல நான் வைக்க கூடிய குற்றச்சாட்டுகள் என்ன என்றால், கடவுளுக்கு கொடுக்கப்படாத மரியாதை இன்னிக்கு துர்கா அம்மாக்கு கொடுக்குறாங்க.. கடவுளுக்கு கூட அந்த மரியாதை இல்லை…. கடவுளுக்கு ஆறு கால பூஜைக்கும் எண்ணெய் இருக்கா ?
நெய் இருக்கா ? திரி இருக்கா ? அதை பத்தி கேள்வி இல்லை. கோவில் சொத்துக்கள் பத்திரமா இருக்கா ? அதெல்லாம் எதுவும் இல்லை. ஆனால் துர்கா அம்மா வரும் போது சிவப்பு கம்பளம் விரிச்சிருக்கீங்களா? எல்லா ரிசீவ் பண்றதுக்கு கரெக்டா வரிங்களா ? இதை பார்ப்பதற்காக ஒரு துறை…. இதற்கு ஒரு அமைச்சர் சேகர்பாபு அவர்கள், இதைத்தான் நாங்கள் கண்டுச்சுக்கிட்டு இருக்கோம்.
துர்கா அம்மா எங்க போறாங்கன்னு பாக்குற வேலை பிஜேபிக்கு கிடையாது. துர்கா அம்மா எங்க போறாங்கன்னு பாக்குற வேலை சேகர்பாபு அவர்களது…. VVIP தரிசனம் இதையெல்லாம் எடுங்கன்னு தான் நாங்க சொல்றோம். ஆனால் முதலமைச்சர் அவரிகள் கோபத்தை எங்க மேல காட்டாம சேகர் பாபு மீது காட்டணும்.சேகர்பாபு அவர்கள் தான் தன்னுடைய முழு நேர பணியாக துர்கா ஸ்டாலின் அவர்கள் எங்க போறாங்கன்னு கண்காணிச்சுட்டு இருக்காங்க என தெரிவித்தார்.