சிவா தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான பார்ட்டி திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியிடுவதற்கு தயாரான நிலையில் இருந்தது. இப்படம் முழுவதும் பிஜி தீவில் உருவாக்கப்பட்டது. இப்படத்தில் சத்யராஜ், ஜெய், ஷாம், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா மற்றும் சஞ்சிதா ஷெட்டி என பலர் நடித்திருந்தனர்.இந்நிலையில் பிஜியில் அரசாங்கம் மாறியதால் சான்றிதழ் வழங்குவதில் தடை ஏற்பட்டது.

சமீபத்தில் நேர்காணலில் கலந்து கொண்ட டி.சிவா சான்றிதழை விரைவில் பெற்று படத்தை திரையிட வேண்டும் என்ற குறிக்கோளில் தயாரிப்பு தரப்பு முடிவெடுத்துள்ளது. மேலும் இப்படம் டிசம்பர் மாதம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் கூறியிருக்கிறார். இதைத்தொடர்ந்து இத்திரைப்படத்தில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் இணைந்து சொந்த குரலில் ஒரு பாடலை பாடியிருப்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.