அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,    இன்னறைக்கு  ஸ்டாலின் பேசுறாரு…  அண்ணா திமுக ஆட்சியில் என்ன செய்தீர்கள் என்று ? ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்து சாதனை படைத்தோம்… அம்மா இருக்கும்போது 6… கிட்டத்தட்ட 17 மருத்துவக் கல்லூரிகளை 10 ஆண்டுகளில் கொண்டு வந்த ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ மாணவிகள் குறைந்த செலவிலே… குறைந்த கட்டணத்தில் மருத்துவக் கல்லூரி படிக்க கூடிய வாய்ப்பை உருவாக்கி தந்தோம்…. அது மட்டும் அல்ல…

ஏழை எளிய குடும்பத்தில் இருக்கின்றவர்கள் ஏதாவது சிகிச்சை பெற வேண்டுமென்றால் ? இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறலாம். அற்புதமான மருத்துவக் கல்லூரி…  இந்த 11 மருத்துவக் கல்லூரியில் நீங்க போய் பாருங்க,  பிரமாதமாக கட்டி இருக்கேன்…. ஏழைகளுக்கு வைத்தியம் கொடுக்கின்ற… சிகிச்சை அளிக்கின்ற மருத்துவமனை உலக தரத்திற்கு ஏற்ற மருத்துவமனை.

அப்போலோ மருத்துவமனையில் கூட இப்படிப்பட்ட வசதி கிடையாது….  அந்த 11 மருத்துவக் கல்லூரி நேரடியாக என் பார்வை செலுத்தி…. ஒவ்வொரு அறையும் சிறப்பாக இருக்க வேண்டும்…. சிகிச்சை ஏழை மக்களுக்கு முறையாக கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்து சாதனை படைத்த அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம் என பெருமையோடு பேசினார்.