
செய்தியாளர்களிடம் பேசிய பாமக வடக்கு மண்டல இணைச்செயலாளர் ஏ கே மூர்த்தி, எங்களுடைய கட்சியினுடைய தலைவர், முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும், அந்த மாவட்டத்தினுடைய நகராட்சியா இருந்தாலும் சரி, பேரூராட்சியாக இருந்தாலும் சரி, ஒன்றிய ஊராட்சி என அனைத்து பகுதிக்கும் நேரடியாக சென்று, மக்களை பார்த்து, மக்களிடம் பாட்டாளி உடைய கொள்கையை சொல்லி, துண்டறிக்கை போட்டு..
ஒவ்வொருவரும் அந்த பகுதி சென்று, மக்களிடம் படிவத்தை கொடுத்து உறுப்பினர் சேர்த்து, பாட்டாளி மக்கள் கட்சி வந்தால் என்ன செய்வார்கள் ? இவர் மத்தியிலே சுகாதாரத்துறை அமைச்சராகவும், மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருக்கும் போது என்ன செய்தார்கள் ? நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு காலம் ஆகிவிட்டது. இந்த மக்களுக்கு என்ன செய்தார்கள் ? அதையெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று சொன்னார்கள்.
அந்த அடிப்படையில் இன்றைக்கு கட்சியினுடைய நிர்வாகி அனைவரும் ஒவ்வொரு கிராமமும் சென்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் கூட்டி, மருத்துவர் ஐயா அவர்களும் – எங்களுடைய கட்சியினுடைய தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களும் யாருடன் கூட்டணி வைத்தாலும் சரி, நீக்கின்ற கூட்டணி கட்சி தர்மத்தோடு நிற்கின்ற வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு பொறுப்பாளர்களும் ஆர்வமாக செய்து கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.