
பெருமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளை இழந்த மக்களுக்கும், விவசாய பெருங்குடி மக்களுக்கும்…. கால்நடை இழப்பை சந்தித்து இருக்க கூடிய மக்களுக்கும் தமிழ்நாடு அரசு தேவையான நிவாரணத்தை வழங்கும். இந்த மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 000யினை ரூபாய் 10,000 ஆகவும் உயர்த்தி வழங்கிடவும்,
மழையினால் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ள இறவை பாசன பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13, 500 ரூபாயிலிருந்து 17,000 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக சேதமுற்று இருப்பின் இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18,000 ரூபாயிலிருந்து 22,500 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும், மழையினால் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக பாதிக்கப்பட்ட மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 7410 ரூபாயிலிருந்து 8500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கிடவும்,
33 ஆயிரம் ரூபாயாக இருந்த எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளை உயிரிழப்பு நிவாரணத்தை 37 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்…. 3000 ரூபாயாக இருந்த வெள்ளாடு, செம்மறி, ஆடு உயிரிழப்பு நிவாரணத்தை 4,000 ரூபாயாக உயிர்த்தி வழங்கிடவும், சேதம் அடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளை பொறுத்தவரையில்…. முழுமையாக சேதம் அடைந்த கட்டு மரங்களுக்கு, மீன்பிடி வலைகள் உட்பட 32 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் ஆகவும், பகுதியாக சேதம் அடைந்த கட்டு மரங்களுக்கு 10,000 ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாகவும்….
முழுவதும் சேதம் அடைந்த வல்லம் வகை படைகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானிய தொகை 75 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாகவும்…. முழுவதும் சேதமடைந்த இயந்திர படங்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானிய தொகை 5 லட்சம் ரூபாயில் இருந்து 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகவும் உயர்த்தி வழங்கிடவும்…. சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை 10,000 ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
அதீ கன மழை காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிக கடுமையாக வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக 6 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும். இந்த மாவட்டங்களில் உள்ள இதர வட்டங்களுக்கும் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு அங்குள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு அமைச்சர்களும், அதிகாரிகளும் இறுதிவரை இங்கேயே தங்கி மக்கள் காப்பு பணிகளில் ஈடுபட இருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என பேசினார்.