
பல வருடங்களாக ஹிந்தி திரைத்துறையில் ஒரே மாதிரியான புகழைப் பெற்றிருக்கும் நடிகர் சல்மான் கான், தற்போது மீண்டும் தனது ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மூன்று சிறுமிகள் அவரை நேரில் சந்தித்ததோடு, மரியாதையாக அவரின் காலில் விழுந்து வணங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதற்குப் பதிலளித்த சல்மான் கான், இடத்தில் எழுந்து நன்றியுடன் அவர்களிடம் பேசிக்கொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “இந்திய சினிமாவின் மிகவும் நேசிக்கப்படும் நட்சத்திரம் சல்மான் கான் தான்” என்று ஒருவர் கமெண்ட் செய்திருந்தார்.
சினிமா பக்கம் நோக்கினால், சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் மெகா படைப்பு சிகந்தர் திரைப்படம், மார்ச் 30 ஆம் தேதி ரமலான் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார்.
சஜித் நடியாட்வாலா தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் டீசரும், பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்படம் தபாங் ஸ்டைல் ஆக்ஷன், காதல், திரில்லர் என அனைத்தும் கலந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram