
நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மரபணு மாற்றுவதனால் ? குழந்தை பிறக்கிற திறன் குறைந்தது விடுகின்றது. முதலில் இரண்டு குழந்தைக்கு மேல குழந்தை பெற ஆற்றலை அதிகமா வச்சிருந்தாங்க. கால் நூற்றாண்டுக்கு முன்னாடி பிறப்பின் விகிதத்தை கட்டுப்படுத்த பேமிலி பிளானிங் குடும்பக்கட்டுப்பாடு… அய்யா.. அய்யா… ரெண்டுக்கு மேல வேண்டாம்… நாம் இருவர், நமக்கு இருவர். இப்படி ஒரு முக்கோணம் போட்டு இருந்தான். வீடு வீட்டுக்கு எழுதி வச்சிருப்பான்.
மாநகராட்சி கட்டிடங்கள்ல எழுதிருப்பான். அதுக்கப்புறம் பேருந்து நிலையம் உள்ளே எல்லாம் நாம் இருவர். நமக்கு ஒருவர். கொஞ்ச நாள் கழிச்சு, நாம் இருவர் நமக்கு எதற்கு இன்னொருவர். வந்துருச்சில்ல… அன்னைக்கி குழந்தையை ரொம்ப பெத்துராதீங்க… ஏன்னா…. பாப்புலேஷன், ப்ரொடக்ஷன் இரண்டும் சமம் விகிதத்தில் முன்னேறனும். உற்பத்தியும், மக்கள் தொகையும் சம விகிதத்தில் போனும்.
மால்தஸ் சொல்லுறான்ல…. நல்லா கவனிச்சுக்கோங்க…. மக்கள் தொகை 2 x 2 x 2 என x பெருக்கல் விகிதத்துல முன்னேறுது. உற்பத்தி 2 + 2 + 2 என + கூட்டல் வீதத்தில் முன்னேறுது. அப்ப மக்கள் தொகையின் பெருக்கத்தை விட உற்பத்தி குறைவதால் பற்றாக்குறை வருது என மால்தஸ் சொல்கின்றன. அவன் ஒரு பொருளாதார மேதை. மால்தஸ் அப்படினா வேற யாருன்னு நினைக்காத அவன் ஒரு பொருளாதார மேதை. அதனால் இதை சொல்றான்.
அதனால இவன் பிறப்பின் விகிதத்தை கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாடை கொண்டு வந்தான். இப்போ இந்த தெருவில் அப்படியே போனின்னா…. ஐஸ்வர்யா வந்தோம், எங்களுக்கும் ஒரு குழந்தை…. செயற்கை கருத்தரிப்பு மையங்கள். ஏன் ? மரபணு மாறிடுச்சு ராஜா…. ஒன்னும் செய்ய முடியாது நீ. இதெல்லாம் எப்படி மாற்றுவது ? ஒன்னும் செய்ய வேண்டாம் நீ. ஒரு ஒட்டு, இந்த ஆளுக்கு போட்டுரு. அந்த ஆளுக்கு போட்டு போயிட்டே இரு. புரட்சி என்பது தலைகீழ் மாற்றம். மாற்றம் என்பது மானுட தத்துவம். மாறாது என்று சொல்லைத் தவிர, மற்றவை அனைத்தும் மாறிவிடும் மாமேதை மார்க்ஸ் தலைகீழா மாத்திடுவேன் என தெரிவித்தார்.