ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதிக்குள் இஸ்ரேலியர்கள் நுழைந்ததால் ஹமாஸ் குழுவினர் ஆத்திரம் அடைந்தனர். இஸ்ரேலியர்களுக்கு துணையாக நாட்டு ராணுவமும் அல் அக்சா மசூதிக்குள் நுழைந்ததால் பதற்றம் ஏர்பட்டது.  ஐந்து நாட்களுக்கு மேலாக அல் அக்சா மசூதியில் இஸ்ரேலியர்கள் தங்கி இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து இஸ்ரேலியர்கள் மீது போரை தொடங்கியது ஹமாஸ்க் குழு.

இஸ்ரேல் நேரப்படி அதிகாலை ஐந்து மணிக்கு தாக்குதலை தொடங்கியது ஹமாஸ் குழு. ஒரே நேரத்தில் தரை, வான்,  கடல் வழியாக இஸ்ரேல் நிலைகளின் மீது தாக்குதல் நடத்தினர்.  வான்வெளி தாக்குதலின் போது இஸ்ரேலின் தெற்கு பகுதிக்குள் ஹமாஸ் குழு நுழைந்தது. உறக்கத்தில் இருந்த இஸ்ரேலிய ராணுவத்தினர் சிறை பிடித்து விட்டு, ஹமாஸ் குழு முன்னேற்றம். கசாவை ஒட்டி உள்ள ஏழு இஸ்ரேலிய நகரங்களில் ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் ராணுவத்துடன் சண்டை இட்டு வருகின்றனர்.

ஹமாஸ் குழு இஸ்ரேலுக்குள் நுழைந்த நிலையில் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவசர ஆலோசனை மேற்கொண்டார். அமைச்சரவை சகாக்கள்,  ராணுவ தளபதியுடன் ரகசியிடத்தில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆலோசனை நடத்தி வருகின்றார். இஸ்ரேலை அழித்து ஒழிப்போம். இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் இருந்து பாலஸ்தீனத்தை விடுவிக்க போர்.  பாலசீனத்தை விடுவிக்க தற்போது தான் சரியான தருணம். பாலஸ்தீனியர்கள் ஆயுதங்களுடன் இஸ்ரேல் நோக்கி முன்னேறுங்கள். கையில் கிடைக்கும் ஆயுதங்களுடன் பாலஸ்தீனியர்கள் போருக்கு செல்ல வேண்டும் என ஹமாஸ் குழு அழைப்பு விடுத்துள்ளது.

இஸ்ரேலின் பிரடேட்டர் ரக ட்ரோன்கள் ஹமாஸ் குழுவினரை வேட்டையாடத் தொடங்கியது.  இஸ்ரேலில் நுழைந்த ஹமாஸ் குழுவினரை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஹமாஸ் படையினர் மீது பிரடேட்டர் ரக ட்ரோன்கள் குண்டு வீசும் காட்சி வெளியாகியது. ஏழு நகரங்களில் நுழைந்த ஹமாஸ் படையினர் பிரடேட்டர் ரக ட்ரோன்கள் மூலம் வேட்டையாடபடுகின்றனர்.  30000 அடி உயரத்திலிருந்து குண்டு வீசக்கூடிய வல்லமை படைத்தது பிரடேட்டர் ரக ட்ரோன்கள். இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலில் 545 பேர் காயம் அடைந்துள்ளனர், 22 பேர் பலியாகி உள்ளனர்.

இஸ்ரேல் தாக்குதலால் காசா நகரம் பற்றி  எரிய தொடங்கியுள்ளது. வானுயர்ந்த கட்டிடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் விமானப்படை குண்டு மழை பொழிவதால் காசா  நகரம் பற்றி எரிய தொடங்கியுள்ளது. ஹமாஸ் தாக்குலில்  70 பேர் படுகாயம் அடைந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

துணை சுகாதார பணியாளர் ஒருவரும் கொல்லப்பட்டதாக தகவல். ஹமா ஸ் குழுவினர் இஸ்ரேலின் இரண்டு ஆம்புலன்ஸ் கைப்பற்றியுள்ளனர் இஸ்ரேல் மருத்துவமனைகளில் ரத்தத்திற்கு கடும் தட்டுப்பாடு என தகவல் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக  ரத்தம் தேவை.  பொதுமக்கள் ரத்த தானம் செய்ய முன்வருமாறு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது .