உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி என்பது 2 ஆண்டு கால கட்டத்தில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளின் முடிவை உள்ளடக்கியதாகும். கடந்த 2021 ஆம் ஆண்டு முதலாவது சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடந்தது. இதில் இங்கிலாந்து அணி இந்தியாவை தோற்கடித்து வெற்றி பெற்றது. கடந்த 2023 ஆம் ஆண்டில் நடந்த 2வது சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவை வீழ்த்தி கோப்பையை பெற்றது.

இதைத்தொடர்ந்து 9 அணிகள் இடையேயிலான மூன்றாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2023 ஆம் ஆண்டில் தொடங்கியது. இதில் சிறப்பாக விளையாடிய இந்தியா அணி இறுதிச் சுற்றை நெருங்கி வந்தது. ஆனால் சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும், ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் போட்டியிலும் தோல்வி அடைந்தது.

இதனால் இறுதிப்போட்டியின் வாய்ப்பை இந்திய அணி பறி கொடுத்தது. தென்னாப்பிரிக்கா முதலிடத்தையும், ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்தையும் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணி மோதியது.

இதில் தென் ஆப்பிரிக்கா அணி வென்றது. இந்நிலையில் இந்த தொடரில் முதல் இடத்தை பிடித்த தென்னாப்பிரிக்கா முதல் கடைசி இடம் பிடித்த பாகிஸ்தான் வரை 9 அணிகளும் பெற்ற பரிசுத்தொகை விவரங்கள் இதோ…

1.தென் ஆப்பிரிக்கா – 30.75 கோடி

2. ஆஸ்திரேலியா – 18.5 கோடி

3. இந்தியா – 12.31 கோடி

4. நியூசிலாந்து – 10.26 கோடி

5. இங்கிலாந்து – 8.20 கோடி

6. இலங்கை – 7.18 கோடி

7. வங்காளதேசம் – 6.15 கோடி

8. வெஸ்ட் இண்டீஸ் – 5.13 கோடி

9. பாகிஸ்தான் – 4.10 கோடி